symptoms of type 2 diabetes

Share

நாம் சாப்பிடும் உணவு, உடலில் ஆற்றலாக மாறுகிறது. சில உணவுகள் உடனடி ஆற்றலை வழங்குகிறது. சில உணவுகள் உடலில் சேமிக்கப்படுகிறது, நமது அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறோம். உணவுகள் குளுக்கோசாக மாறும் போது, அது எவ்வாறு எரிபொருளாகப் பயன்படுகிறது அல்லது நம்முடைய உடல் அதனை எரிபொருளாக எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் காரணமாக இருக்கிறது.

உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

குளுக்கோஸ் மற்றும் இன்சுலின்:

உடலில் நேரடியாக குளுக்கோஸ் வெளிப்பட்டாலும், உடலுள் உள்ள செல்கள் குளுக்கோஸைப் பெறுவதற்கு இன்சுலின் தேவைப்படுகிறது. ஏனெனில் செல்கள் நேரடியாக குளுக்கோஸை உறிஞ்சாது. செல்களைத் திறக்கவும் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றவும் தேவையான அளவு இன்சுலின் சுரப்பது அவசியம். உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரந்தாலும், அதை விட அதிக குளுக்கோஸ் இருக்கும் போது, அதுவும் சர்க்கரை நோயை உண்டாக்கும்.

நீரிழிவு நோயில் மூன்று முக்கிய டைப்கள் உள்ளன:

டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவு மற்றும் கர்ப்பகால நீரிழிவு. நீரிழிவு டைப்-1 மற்றும் நீரிழிவு டைப்-2 ஆகிய இரண்டிலும் அறிகுறிகள் ஓரளவு ஒரே மாதிரி இருக்கும்.

டைப்-2 நீரிழிவு என்பது, ஒரு நபரின் உடலில் குளுக்கோஸைக் கட்டுப்படுத்தி எரிபொருளாகப் பயன்படுத்தும் விதத்தில் ஏற்படும் சிக்கலைக் காட்டுகிறது. இன்சுளினால் குளுக்கோசை கட்டுப்படுத்த முடியாதா நிலை நீண்ட காலம் நீடித்தால், இரத்த ஓட்டத்தில் அதிக குளுக்கோஸ் சேர்ந்து, இது நரம்பு மண்டலம், மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளுக்கு வழிவகுக்கும். டைப் 2 நீரிழிவு நோயில், இரண்டு விதங்களால் ஏற்படும்.

நோயாளயின் கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது, இதனால் செல்களால் தேவையான குளுக்கோசை உறிஞ்சப்பட முடியாமல் போகும் . உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்தாலும், குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்தாலும், நீரிழிவு நோய் ஏற்படும்.

தயிருடன் இந்த 5 உணவுகளை ஒருபோதும் சேர்த்து சாப்பிடாதீங்க… அப்புறம் ஆபத்து உங்களுதான்…

டைப் 2 சர்க்கரை நோய் பெரியவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. ஆனால், டைப் 1 நீரிழிவு குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு என்று எல்லா வயதினருக்கும் மிகவும் பொதுவானது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன், டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு என்னென்ன நோய்க்கான அறிகுறிகள் ஏற்படும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் :

அதிக தாகம்:

நோயாளியின் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியாகும் போது. சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அத்தகைய நேரங்களில் செல்களில் இருந்து அதிக திரவம் எடுக்கப்பட்டு நோயாளிக்கு அதிக தாகம் ஏற்படுகிறது.

நாக்கு வறண்டு போவது:

நீரிழப்பு மற்றும் அதிகப்படியான சிறுநீர் கழித்தல் காரணமாக, நோயாளியின் வாய் அல்லது நாக்கு அடிக்கடி வறண்டு போகும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:

உடலில் இருந்து அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்ற வேண்டி இருப்பதால், சிறுநீரகங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நிலை உண்டாகும்.

உடல் சோர்வு:

உணவில் இருந்து வரும் ஆற்றலை உடலால் முழுமையாகப் பயன்படுத்த முடியாது. மேலும், நீரிழப்பு காரணமாக, நோயாளிகள் அதிகப்படியான சோர்வை உணரத் தொடங்குவார்கள்.

மங்கலான பார்வை:

உயர் இரத்த சர்க்கரை சம்பந்தப்பட்ட நோயாளியின் பார்வையை பாதிக்கிறது.

Monsoon Food | மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய 8 உணவுகள் என்னென்ன.?

அடிக்கடி தலைவலி:

உயர் இரத்த சர்க்கரை நரம்புகளை பாதிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இதனால், அடிக்கடி தலைவலி ஏற்படும்.

எந்த முயற்சியும் இல்லாமல் உடல் எடை குறைதல்:

உடலில் குளுக்கோஸ் சிறுநீர் மூலம் வெளியேறும் போது, கலோரிகளும் வெளியேறும். இது நோயாளியை பலவீனமாக்குவதோடு, எந்த உடற்பயிற்சியும் இன்றி எடையைக் குறைக்கத் தொடங்குகிறது.

அடிக்கடி ஏற்படும் தொற்றுகள், காயங்கள் ஆறாமல் இருப்பது:

அதிக இரத்த சர்க்கரை உடலின் இரத்த ஓட்டத்தை மோசமாக பாதிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. அதனால், அடிக்கடி தொற்று நோய், காயங்கள் ஆறாமல் இருப்பது போன்ற பிரச்னைகளை ஏற்படும்.

கைகால்களில் கூச்ச உணர்வு:

அதிகமான குளுக்கோஸ் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரத்த ஓட்டம் பாதிப்பு அடைவதால், கைகால்களில் கூச்ச உணர்வு ஏற்படும். இந்த அறிகுறி முக்கியமாக டைப் 2 நீரிழிவு நோயில் அதிகமாகக் காணப்படுகிறது.

ஈறுகள் வீக்கம், சிவந்து போவது:

டைப் 2 சர்க்கரை நோயால் ஈறுகளில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஈறுகள் பலவீனமாகும், ஈறுகள் வீங்கி, வலி உண்டாகும் மற்றும் சிவப்பு நிறத்தில் மாறும்.

கழுத்து மற்றும் கழுத்தை சுற்றியுள்ள பகுதிகள் நிறம் மங்குதல்:

டைப் 2 நீரிழிவு நோயில், சருமமும் பாதிக்கப்படுகிறது. நோயாளியின் அக்குள் மற்றும் கழுத்து, கருமையாக மாறும் மற்றும் கருப்புப் புள்ளிகள் தோன்றும்.

டைப் 2 நீரிழிவு நோய் சில நேரம் கவனிக்கபப்டாமல் போகலாம். இதனால், பார்வை இழப்பு, கடுமையான காயம், கோமா அல்லது மரணம் கூட ஏற்படும் சாத்தியம் உள்ளது. மேலும், டைப் 2 நீரிழிவு நோயில், ஹைப்பர் கிளைசீமியா என்னும் இரத்த சர்க்கரை அளவு 180 முதல் 200 mg / dL க்கும் அதிகமாகும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் இதயம், சிறுநீரகம், பார்வை மற்றும் நரம்புகளை பாதிப்படையும். ரத்த சர்க்கரை அளவை அவ்வபோது கண்காணித்து இரண்டு நிலைகளும் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். மேலும், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

வாய்ப்புண் எப்படி உருவாகிறது..? சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்…

நாட்பட்ட டைப் 2 நீரிழிவு இதயப் பிரச்சனைகள், இரத்த நாளக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், நரம்பு பாதிப்பு, கண் பிரச்சனைகள், காது கேளாமை, சிறுநீரகப் பிரச்சனைகள், தோல் கோளாறுகள் மற்றும் பலவற்றிற்கு வழிவகுக்கும்.

டைப் 2 நீரிழிவு நோய் ஓரளவு தடுக்கக்கூடிய வகையாகும். சரியான உணவு முறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பு ஆகியவை நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com