Swadeshi Jagran Manch demands withdrawal permissions of Amazon Flipkart

Share

அமேசான் நிறுவனத்தின் வர்த்தக உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச் வலியுறுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பத்திரிகையான பஞ்சன்யா, அமேசான் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும், கிறிஸ்தவத்தை இந்தியாவில் பரப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தது.

இதையும் படிக்க : அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம்

அமேசான் நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கஞ்சா கடத்தலுக்கு அந்த நிறுவனம் துணை போனதாக எழுந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு வேறு பொருட்கள் வருவதாகவும் வாடிக்கையாளர்கள் சிலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தக உரிமங்களை திரும்பப் பெற வேண்டும் என்று சுதேசி ஜக்ரான் மஞ்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஆன்லைனில் போதைப் பொருள் விற்பனை – அமேசான் இந்தியா நிர்வாக இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு

இதுதொடர்பாக அந்த அமைப்பு மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது-
ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுககு அளித்து வரும் வர்த்தக உரிமையை அரசு திரும்பப் பெற வேண்டும். அந்த இரு நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட வேண்டும். பல அதிகாரிகள் இந்த இரு நிறுவனங்கள் மூலம் எந்த வேலையும் செய்யாமல் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிக்க : அமேசான் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தல்

அந்த அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளித்து விட்டு, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவை, இந்திய அதிகாரிகளுக் லஞ்சம் கொடுத்துள்ளன.

அமேசான் மற்றும் வால்மார்ட்/பிளிப்கார்ட் போன்ற பன்னாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் அப்பட்டமாக விதிமீறல்கள் மற்றும் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையங்கள், ஒட்டுமொத்த ஆன்லைன் வர்த்தகத்தில் 80% இடத்தைப் பிடித்துள்ளன. அவர்கள் வழங்கும் தள்ளுபடிகள் ஆஃப்லைன் சந்தைகளையும் மோசமாக பாதிக்கின்றன.

சலுகைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க அதிரடியாக விளம்பரம் செய்து, அதிக தள்ளுபடிகள் வழங்கி வாடிக்கையாளர்களை அமேசானும், பிளிப்கார்ட்டும் கவர்ந்து வருகிறது. தரமான பொருட்களை விட தள்ளுபடிக்காகவே பொதுமக்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். மோசடிகள் பல செய்துதான், அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வர்த்த உரிமைகளை பெற்றுள்ளார்கள். எனவே, அவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com