Surya kumar: தொப்பிக்கு முத்தமிட்டு மனதை வென்ற சூர்யா! Video

Share

நவம்பர் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் சௌத் ஆப்பிரிக்கா இடையேயான டி20ஐ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் அதிரடி சதத்தால் இந்திய அணி இமாலய வெற்றியை கண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் ரசிகர்களின் மனதை வென்றது. இந்த போட்டியில் ரவி பிஷ்னாய் அருமையான கேட்ச்-ஐ பிடித்தார்.

இந்த கேட்ச்-இன் மூலம் கிடைத்த விக்கெட்-ஐ கொண்டாடும் வேளையில் பிஷ்னாய் தலையிலிருந்து விழுந்த இந்திய அணியின் தொப்பியை திளைப்பில் சூர்யா மிதித்துவிட்டார். பின்னர் அதனை உணர்ந்த சூர்யா அந்த தொப்பியை எடுத்து மரியாதை கொடுக்கும் வகையில் முத்தமிட்டு ரிங்கு சிங்-இன் கைகளில் ஒப்படைத்தார். இந்திய அணியின் சின்னம் கொண்ட தொப்பிக்கு சூர்யா கொடுத்த மரியாதை சமூக ஊடகங்கள் மூலம் பரவி ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து அவர்களின் மரியாதையையும் பெற்றது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com