stop eating ghee right away if you have these health conditions

Share

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், உடல் பருமன், பிசிஓடி, சிறுநீரகப் பிரச்சனை உள்ளர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் உடனடியாக சுத்தமான பசு நெய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்பதை மட்டும் நினைவில் வைத்து அதற்கேற்றால் போல் தங்களுடைய உணவு முறைகளைப் பின்பற்றி வந்தனர். பொதுவாக சைவ பிரியர்கள் அதிகமாக இருந்ததால், பருப்பும் அதற்கு கூடுதல் சுவையளிப்பதற்காக சுத்தமான பசு நெய்யையும் அதிகளவில் உட்கொண்டனர். இது சுவைக்கு மட்டுமில்லாது பல உடல் நலப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைந்தது.

குறிப்பாக நெய்யில் உள்ள வைட்டமின்கள் ஏ,டி, இ, கே போன்ற சத்துக்கள் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தவும், தசைகளை வலுப்படுத்துவதற்கு மற்றும் கண்பார்வை அதிகரிக்கவும் நெய் உதவியாக உள்ளது.

இதோடு மலச்சிக்கல், பித்தம், கபநோய்கள், சொறி முதலிய நோய்கள் குணமாகவும் தினமும் உங்களது சாப்பாட்டில் நெய் சேர்த்து சாப்பிடலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இதே வேளையில் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு“ என்பதற்கேற்றால் போல் நெய்யையும் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

டயட் கோக் குடிப்பதால் ஆபத்து… இந்த 5 பக்கவிளைவுகளை பற்றி தெரியுமா? 

இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் குறிப்பிட்ட சில நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என்பது? குறித்து நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்..

இதய நோய் அல்லது சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பசு நெய்யை அதிகமாக உட்கொள்ளக் கூடாது என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்கள் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்

நெய் சாப்பிடுவது மலச்சிக்கலுக்குத் தீர்வு தரும் என்றாலும் உங்களுக்கு ஏதேனும் வயிற்றுக் கோளாறு இருந்தால், பசு நெய் அல்லது எந்த வகையான நெய்யையும் உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக நெய் கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளதால், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளதாக உள்ளது. எனவே நீங்கள் 30 வயதைத் தாண்டியிருந்தால், தினசரி உணவின் ஒரு பகுதியாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய நெய்யின் அளவு குறித்து உங்கள் மருத்துவர் அல்லது உணவு நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று நீங்கள் சாப்பிட வேண்டும்.

நெய்யானது சரியாக செரிமானம் ஆகாத போது உடல் பருமன், ரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், கல்லீரல் கொழுப்பு உள்ளவர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் நெய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள கொழுப்பு சத்துக்கள் உங்களது இதய ஆரோக்கியத்தை படிப்படியாக பாதித்துவிடும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com