தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில், “பா.ம.க, தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அன்புமணி
அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “அத்தகைய தகவல்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது” என்றிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக, பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை இரண்டு முறை தோற்கடித்துள்ளோம்.