மேலும், “எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை 200 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் இயங்கி வருகிறது. நவீன மருத்துவ சாதனங்கள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் கொரானா நோய் தாக்குதலுக்குப் பின் உணவு பழக்க வழக்கம் மாற்றம் காரணமாகவும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவு காரணமாக இரைப்பை உள்ளிட்ட வயிற்று பகுதியில், கல்லீரலில் கொழுப்பு சத்து அதிகமாகி கல்லீரலை பாதிக்கும். அதோடு கொழுப்பு சத்து இதயத்திற்கு செல்லும் குழாய் மூலம் இதயத்தை தாக்கும். தற்போது இது உலக அளவில் இளைஞர்களை அதிக அளவில் பாதித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. கல்லீரல் பாதிப்பை தொடக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் கல்லீரல் இயக்கம் தடைபடுவதை தவிர்க்க முடியும். இல்லையென்றால் கல்லீரல்உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிவரும். எனவே, இரைப்பை கல்லீரல் பாதிப்பை தடுக்க உணவுமுறையில் கட்டுப்பாடு அவசியம்” என்று கூறினார்.
SRM குளோபல் மருத்துவமனையில் இரப்பை கல்லீரல் சிகிச்சை சிறப்பு மையம் தொடக்கம்! | SRM Global Hospital’s Special Liver Treatment Center Launched!
Share