SRH vs KKR கிளாசன் அதிரடி சதம்: அடுத்தடுத்த இரு வெற்றிகளால் சன்ரைசர்ஸ் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்

Share

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம்.

ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 279 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசன்

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த பல சீசன்களாகவே பெரிய ஸ்கோர்களையும், அதிரடி வெற்றிகளையும் கிளாசன் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வரிசையில் நேற்றைய ஆட்டமும் முக்கிய மைல்கல்லாகும். 39 பந்துகளில் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கிளாசன் கணக்கில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார், இறுதியாக முடிக்கும்போது 269 ஸ்ட்ரைக் ரேட்டில் கிளாசன் இருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com