Sourav Ganguly: "ஐ.பி.எல் வெச்சு டெஸ்ட் டீம் செலக்ட் பண்ணாதீங்க!" – கங்குலி சொல்லும் லாஜிக்

Share

ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பலரும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என்றும் புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

சவுரவ் கங்குலி

இதுகுறித்து பேசிய அவர், “ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இந்திய வீரர்களுக்கு எப்போதுமே திறமை இருக்கிறது. நான் விராட் கோலி, புஜாரா ஆகியோர் இல்லாத இந்திய டெஸ்ட் அணியைப் பார்க்க விரும்பவில்லை. குறிப்பாக விராட் கோலி வெறும் 34 வயது மட்டுமே ஆகிறது. அதே சமயம் இந்தியாவிற்கு விளையாட ஏராளமான வீரர்கள் தயாராக இருக்கின்றனர்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஐபிஎல் தொடரை வைத்து மட்டுமே தேர்வு செய்யக்கூடாது. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களையும் தேர்ந்தெடுத்து  அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஜெய்ஸ்வால் அல்லது படிதார், மேற்கு வங்க அணியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் நிறைய ரன்களை அடித்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா

சுப்மன் கில், ருத்துராஜ் கெயிக்வாட் ஆகியோர் மிகவும் இளமையானவர்கள். அதை விட என்னுடைய கருத்தை ஹர்திக் பாண்டியா கேட்பார் என்று நம்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக இங்கிலாந்து போன்ற கால சூழ்நிலைகளில் இந்தியாவிற்காகக் கண்டிப்பாக விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.          

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com