Cure SMA Foundation என்பது, முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து உருவாக்கிய ஓர் அறக்கட்டளை. இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக சில கோரிக்கைகளை வைத்து இந்த அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இதற்காக மற்ற நாடுகளில் இந்த மருந்தின் விலை விவரங்களைத் திரட்டியபோதுதான், இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
சீனாவில் அரசே Roche நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறப்பு விலையை நிர்ணயம் செய்துள்ளது, பாகிஸ்தானிலும் இதுவே நடந்திருக்கிறது.
Roche நிறுவனமோ இதற்கு வேறுவிதமான சமாதானங்கள் சொல்கிறது. “இந்தியாவில் நாங்கள் சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். தொடர்ச்சியாக மருந்து வாங்கும் நோயாளிகளுக்கு சலுகையாக இலவச பாட்டில்கள் வழங்குகிறோம். இதுதவிர, மனிதாபிமான அடிப்படையில் எளிய குடும்பங்களைச் சேர்ந்த 300 நோயாளிகளுக்கு தொடர்ந்து இலவசமாக இந்த மருந்தை வழங்கிவருகிறோம்” என்கிறது அந்த நிறுவனம்.