Siragadikka aasai : சிரித்தே மனோஜை அழ வைத்த மீனா; முத்துவை வீழ்த்த ரோகிணி போடும் ப்ளான்! | Siragadikka aasai tamil serial latest episode update

Share

சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் மனோஜுக்காக நண்டு ரசம் கேட்டு விஜயா அதிகாரம் செய்கிறார். மீனா முடியாது என்கிறார். ரோகிணியை செய்து தரச் சொல்லுங்கள் என்று மீனா சொல்ல, மனோஜ் கடுப்பாகி, “அவ மில்லினியர் பொண்ணு, உன்ன மாதிரி பூ வியாபாரம் செய்யல, போய் ஒழுங்கா சூப் வெச்சு எடுத்துட்டு வா’ என்று அதிகாரம் செய்ய மீனாவுக்குக் கோவம் உச்சத்திற்குச் செல்கிறது. நேராக பெட் ரூமுக்கு சென்று கையில் பெல்ட்டை எடுத்து வந்து மனோஜை விளாசுகிறார்.

பயந்து ஓடுகிறார் விஜயா. மனோஜை அடிப்பது மட்டுமில்லாமல், வீட்டுக்குள் நுழையும் ரோகிணியையும் வெளுத்து வாங்குகிறார் மீனா. இதையெல்லாம் பார்த்த விஜயா உறைந்து விடுகிறார். அதன்பிறகுதான் தெரிகிறது, பெல்டால் அடிப்பது போல மீனா மனதுக்குள் நினைத்துப் பார்த்திருப்பார். அது உண்மையில் நடக்கவில்லை. சம்பவம் மிஸ் ஆகிடுச்சே !

‘ஏன் சிலையாட்டம் நிக்கிற’ என்று விஜயா கேட்கும் போது வெடித்து சிரிக்கிறார் மீனா. மனோஜை பெல்டால் அடித்ததை நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்ததும் விஜயாவும், மனோஜூம் செம கடுப்பாகிறார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com