Shubman Gill; test cricket; இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடித்து பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார்.

Share

இரட்டை சதத்தால் கில் படைத்திருக்கும் சாதனைகள்!

* இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்திருக்கிறார். இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தில்ஷன் அதிகபட்சமாக 193 ரன்கள் அடித்திருந்தார்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

* கடந்த இரண்டு தசாப்தங்களில் இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் கில். இதற்கு முன் கடைசியாக 2003-ல் தென்னாபிரிக்காவின் அப்போதைய கேப்டன் கிரீம் ஸ்மித் லார்ட்ஸ் மைதானத்தில் இரட்டைச் சதமடித்திருந்தார்.

* இங்கிலாந்தில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் (1979-ல் 221 ரன்கள் அடித்திருந்தார்) 45 வருட சாதனையை கில் (269) முறியடித்திருக்கிறார்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

* கவாஸ்கர் (1979), டிராவிட் (2002) ஆகியோருக்குப் பிறகு இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த இந்திய வீரர் கில்.

* இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டில் இரட்டை சதமடித்த முதல் இளம் இந்திய கேப்டன் கில்.

* ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் கில் (269). இதற்குமுன் 254 ரன்களுடன் கோலி முதலிடத்தில் இருந்தார்.

* இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த ஏழாவது வெளிநாட்டு வீரர் கில்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com