சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு வருடமும் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டி என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதில், ஒவ்வொரு வருடமும் “வளர்ந்து வரும் வீராங்கனை (Women”s emerging cricketer)” விருதும் ஒன்று.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், தென்னாப்பிரிக்காவின் அன்னேரி டெர்க்சன், ஸ்காட்லாந்தின் சாஸ்கியா ஹார்லி, அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜென்ட் ஆகியோருடன் இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலும் இடம் பிடித்திருக்கிறார்.