shashi tharoor: Operation Sindoor; பாஜகவைப் பாராட்டும் சசி தரூர்; காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு; சசி தரூர் விளக்கம்

Share

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததிலிருந்து, பா.ஜ.க அரசைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.

அதனால்தான் என்னவோ, ஆபரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு எடுத்துரைக்கும் எம்.பி குழுக்களின் தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டார்.

இந்தக் குழுக்களில் இடம்பெறப் பிற கட்சிகளிடம் எம்.பிக்கள் பெயர் கேட்கப்பட்டபோது, காங்கிரஸ் கொடுத்த எம்.பிக்களின் பெயர் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சசி தரூர்

சசி தரூர்

வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சசி தரூர் புகழ்ந்து வந்தார். இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இது குறித்து தற்போது சசி தரூரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவரது பதில்…

“ஒருவர் தேச நலனுக்காகப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும் போது, இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கிறேன்.

என்னுடைய நண்பர் சல்மான் குர்ஷித், ‘தேசப்பற்றுடன் இருப்பது இப்போது எவ்வளவு பெரிய கடினமான செயலா?’ என்று கேட்டிருப்பதை நான் பார்த்தேன்.

தேச நலனுக்காக ஒருவர் பாடுபடும்போது, அவரைக் கட்சிக்கு எதிரானவர் என்று யாராவது கருதினால், அவர்கள் அவர்களையே கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டுமே, தவிர, எங்களை அல்ல.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com