தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி
கடலை பருப்பு
சோம்பு
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு
புளி
பெரியது தக்காளி – 1
செய்முறை :
முதலில் மிக்ஸி ஜாரில் கடலை பருப்பு மற்றும் அரிசியை தவிர அனைத்தையும் அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் கடலை பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அரிசியை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவு கொஞ்சம் தண்ணீர் பதத்தில்தான் இருக்க வேண்டும்.
கோடை மழைக்கு சூடாக ஏதாவது சாப்பிடனும் போல் இருக்கா..? மாவு அரைக்காமலே மெது வடை சுட ரெசிபி இதோ…
அரைத்ததும் அதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொள்ளுங்கள். அதில் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போடுங்கள்.
இதை நன்றாக கலந்து உப்பு பதம் பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது எப்போதும் போல் தோசைக் கல்லில் சுட்டு எடுங்கள். அவ்வளவுதான் தக்காளி தோசை தயார்.
இதற்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.