Seek votes for BJP but notes from Kejriwal – AAP attacks Wrestler Divya Kakran, ஓட்டுக்கு பாஜக நோட்டுக்கு கெஜ்ரிவாலா?

Share

டெல்லி எனக்கு ஒன்றும் செய்யவில்லை, உத்தரப்பிரதேச அரசுதான் எனக்கு அனைத்து உதவிகளையும் செய்தது என்று கடும் விமர்சனம் வைத்த காமன்வெல்த் வெண்கலப் பதக்க மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரன் மீது ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன் வைத்தது.

அவர் உத்தரப் பிரதேச தேர்தலின் போது பாஜகவுக்கு வாக்கு சேகரித்த வீடியோவை வெளியிட்டு, ஓட்டுக்கு பாஜக நோட்டுக்கு கெஜ்ரிவாலா என்று கடும் விமர்சனத்தை முன் வைத்தது. அங்கு தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் அவர் பாஜகவுக்கு வாக்குச் சேகரித்த வீடியோதான் இது என்கிறது ஆம் ஆத்மி.

அந்த வீடியோவில் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் மல்யுத்த வீராங்கனை திவ்யா கரன், “பிரதமர் மோடியும் யோகி ஆதித்யநாத்தும் நமக்கு என்ன செய்கிறாகள் என்று நமக்குத் தெரியும். விளையாட்டாக இருக்கட்டும், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனவே பிஜேபிக்கு வாக்களியுங்கள்” என்று திவ்யா கக்ரன் வாக்குச் சேகரிக்கிறார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் ஷாலினி சிங், ‘பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பது பணத்துக்கு கெஜ்ரிவாலை எதிர்பார்ப்பது சரியானதல்ல, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அரசியலிலிருந்து தள்ளியிருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக திவ்யா கக்ரன் டெல்லி அரசைக் குற்றம்சாட்டிய போது, “2001-ல் டெல்லிக்கு வந்தேன், 2006-ல் மல்யுத்தம் விளையாட ஆரம்பித்தேன். கோகல்பூரில் 22 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் தந்தை எப்படியோ என் மல்யுத்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். நான் பணம் சம்பாதிப்பதற்காக ஆண்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டேன்.

2011-ல் டெல்லிக்காக வெண்கலம் வென்றேன். 2017 வரை நான் 58 பதக்கங்களை டெல்லிக்காக வென்று கொடுத்துள்ளேன். மனோஜ் திவாரி மட்டுமே எனக்கு ரூ.3 லட்சம் அளித்தார். அந்தப் பணம்தான் எனக்கு பேருதவியாக அமைந்தது.

டெல்லி அரசு துளியும் உதவி செய்யவில்லை. நாங்கள் எங்கள் நிலைமை குறித்து எவ்வளவோ மன்றாடினோம். அதன் பிறகுதான் உத்தரப் பிரதேசம் சென்றோம்” என்று பரபரப்பு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com