தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
கம்பு – 1 கப்
கேழ்வரகு – 1 கப்
கோதுமை – 1 கப்
ஜவ்வரிசி – 1 கப்
ஏலக்காய் – 4
சுக்குப்பொடி – 1 tsp

செய்முறை :
இப்போது ஒரு கடாய் வைத்து நன்கு சூடேறியதும் வேர்க்கடலையை முதலில் போட்டு வறுத்து தட்டில் போடுங்கள்.
பின் கம்பு, கோதுமை என அனைத்தையும் வாசம் வரும் வரை மிதமான தீயில் வறுத்து போடுங்கள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும்.
ஏலக்காய், சுக்குப்பொடி மட்டும் போடக்கூடாது.
அனைத்தையும் வறுத்து எடுத்தபின் சூடு போக ஆற வையுங்கள்.
ஆறியதும் அவற்றை ஜாரில் கொட்டி அதனுடன் ஏலக்காய், சுக்கு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
எப்போதும் போல் இல்லாமல் இன்று வித்தியாசமாக பிரண்டை சட்னி செய்து அசத்துங்கள்…ரெசிபி இதோ…
நன்கு அரைத்துக்கொண்டதும். அதை சல்லடையில் சலித்துக்கொள்ளுங்கள்.
பின் சலித்த மாவை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துக்கொள்ளுங்கள்.
இதை தினமும் சுடுதண்ணீரில் காய்ச்சி இனிப்புக்கு வெல்லம் சேர்த்து பருகலாம். இதில் தண்ணீருக்கு பதில் பாலும் கலந்துகொள்ளலாம். உங்கள் விருப்பம்தான்…
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.