RR vs LSG வைபவ் சூர்யவன்ஷி அசத்தல் அறிமுகம்: வெற்றியை நெருங்கி ஆர்ஆர் மீண்டும் தோற்றது எப்படி?

Share

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 36வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.

போட்டியின் பெரும்பகுதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்த அணி கடைசியில் கோட்டைவிட்டது. கடைசிப் பந்து வரை வெற்றி யாருக்கு என்பதே தெரியாத அளவுக்கு பரபரப்பாக இருந்த இந்தப் போட்டி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தது.

லக்னெள மிடில் ஆர்டர் ஏமாற்றம்

லக்னெள அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு மார்க்ரம்(66), இம்பாக்ட் வீரராக வந்த பதோனி(50) ஆகியோரின் அரைசதங்கள் உதவியதைவிட, கடைசி ஓவரில் அப்துல் சமது அடித்த 27 ரன்கள்தான் ஆட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தது. 10 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த அப்துல் சமது லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com