Rohit Sharma: "இந்த விஷயத்தில் தோனி, கோலியை விட ரோஹித்தான் பெஸ்ட்" – அஷ்வின் பகிரும் அனுபவம்

Share

விளையாட்டைப் பொறுத்தவரையில் தற்காலத்தில் சிறந்து விளங்கும் ஒரு வீரரைச் சமகாலத்தில் சிறந்து விளங்கும் மற்றொரு வீரருடனோ அல்லது முந்தைய காலகட்டத்தில் சிறந்து விளங்கிய வீரருடனோ ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது எக்காலத்திலும் மாறாத ஒன்றாகவே இருக்கிறது.

ரவி சாஸ்திரி – கோலி – தோனி – ரோஹித்

அந்த வரிசையில் சிறந்த கேப்டன் தோனியா, விராட் கோலியா, ரோஹித் சர்மாவா என்ற ஒப்பீடு சமீபகாலமாக அதிகமாகவே இருக்கிறது. இதில், சிறப்பம்சம் என்னவென்றால், தோனியின் கேப்டன்சியில் கோலி, ரோஹித்தும், கோலியின் கேப்டன்சியில் தோனியும், ரோஹித்தும், ரோஹித்தின் கேப்டன்சியில் தோனி, கோலியும் விளையாடியிருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த மூன்று பேரின் கேப்டன்சியிலும் விளையாடியிருக்கும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், இந்த குறிப்பிட்ட விஷயத்தில் தோனி, கோலியை விடவும் ரோஹித் ஸ்ட்ராங் எனத் தெரிவித்திருக்கிறார்.

யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் இது குறித்து வெளிப்படையாகப் பேசிய அஷ்வின், “ரோஹித்தின் கேப்டன்சியில் இரண்டு மூன்று விஷயங்கள் நன்றாக இருக்கின்றன. அணியின் சூழலை எப்போதும் இலகுவாக வைத்திருப்பார். அதற்கான வேலைகளைச் செய்துகொண்டே இருப்பார். மிகவும் நிதானமாக இருப்பார்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

குறிப்பாக, களத்தில் தந்திரமாகச் செயல்படுவதில் வல்லவர். தோனியும், கோலியும் அப்படித்தான். ஆனால், ரோஹித் இதில் இன்னும் கூடுதலாகவே கவனம் செலுத்துவார். ஏதாவது முக்கிய ஆட்டமோ அல்லது தொடரோ வருகிறதென்றால், இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் அனலிடிக்ஸ் குழுவுடன் அமர்ந்து, குறிப்பிட்ட பேட்ஸ்மேனின் வீக்னஸ் என்ன, பவுலரின் திட்டம் என்ன என்பது அறிந்து அதற்கேற்றவாறு தயாராவார். அதுதான் இவரின் பலமே. மேலும், ஒரு வீரரை பிளெயிங் லெவனில் எடுத்துவிட்டால், 100 சதவிகிதம் அந்த வீரரைத் தக்க வைத்திருப்பார். என்னுடைய கரியரில் இந்த மூவரின் கேப்டன்சியில்தான் அதிகம் விளையாடியிருக்கிறேன்.” என்றார்.

Loading…

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com