சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்து அணியை நாளை (ஜூன் 20) எதிர்கொள்ளவிருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் கோலி இல்லாததும், மூன்று போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பதும் கில் அண்ட் கோ-வுக்கு சற்று சவாலானதுதான். அதேசமயம், இது ஒரு புதிய அணியை கட்டமைப்பதற்கான வாய்ப்பும் கூட.
இந்த நிலையில், எதிரணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாதது குறித்து துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிஷப் பண்ட், “அவர்கள் இருவரும் இல்லாதது நிம்மதியா இருக்கிறது.
ஏனெனில் பல வருடங்களாக இங்கிலாந்து அணியில் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
கடைசி இரண்டு சுற்றுப்பயணங்களில் மட்டும் அவர்களுக்கெதிராக நான் விளையாடியிருக்கிறேன்.