`RIP லிட்டில் ராக் ஸ்டார்’ – டேவிட் மில்லர் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு! | David Miller’s young fan passes away ahead of 2nd ODI against India, he shares pics

Share

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் மில்லர் உள்ளிட்ட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இதற்கிடையே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர், தனது தீவிர ரசிகையான குழந்தை ஒன்று இறந்ததற்கு உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், “உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன், மை ஸ்கட்! நான் அறிந்ததிலேயே பெரிய இதயம் நீ. நீ எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையாகவும் உன் முகத்தில் புன்னகையுடனும் சண்டையை வேறு நிலைக்கு கொண்டு செல்வாய். உனக்கு ஒரு குறும்பு பக்கம் உண்டு. உன் பயணத்தில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டாய். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்! RIP” என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com