Rinku Singh: `6,4,6,6,6,6,6′ – நரம்புகளில் மின்னல் பாய்ச்சிய மாவீரன்! – யார் இந்த ரிங்கு சிங் |Story about kolkata knight riders player Rinku Singh

Share

போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் பேசுகையில், ‘விக்கெட்டுகள் அதிகம் விழுந்திருந்தால் ஒரு முனையில் நின்று விக்கெட்டை காத்து கடைசி வரை பேட்டிங் ஆட நான் உதவ வேண்டும். அதேநேரத்தில் அதிரடியாக ஷாட்கள் ஆடும் வேலையை ஷர்துல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களின் திட்டமாக இருந்தது. அதனால்தான் நான் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து கொண்டிருந்தேன்’ என்றிருந்தார். அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ரிங்கு சிங் பற்றி பேசுகையில், ‘ரிங்கு சிங்கால் நினைத்தமாத்திரத்தில் சிக்சர்களை அடிக்க முடியும். ஆனால், அப்படி ஆடாமல் ஒரு முனையில் நின்று பொறுமையாக ஆட வேண்டும் என அறிவுறுத்தினோம். அவரின் செகண்ட் ஃபிடில் இன்னிங்ஸிற்கும் முழுமையான க்ரெடிட் கொடுத்தே ஆக வேண்டும்.’ என பேசியிருந்தார்.

கொல்கத்தாவிற்கு எதிரான அந்தப்போட்டியில் ரிங்கு சிங் 33 பந்துகளில் 46 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 139. அதிலும் முதல் 27 பந்துகளில் 30 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

அணிக்கு தேவைப்படும்பட்சத்தில் அவரால் எந்த தயக்கமும் இல்லாமல் செகண்ட் ஃபிடிலும் ஆட முடியும். அதேநேரத்தில் சுழன்றடிக்கும் சூறாவளியாக முழுக்க முழுக்க ஆக்சனை மட்டுமே வெளிக்காட்டும் இன்னிங்ஸை கூட ஆட முடியும். பேட்டிங்கை தாண்டி ஒரு வீரராக அணியின் திட்டத்திற்கும் தலைவனின் சொல்லுக்கும் முழுமையாக கட்டுப்படும் அந்த பெரும் குணமும் ரிங்கு சிங்கை தனித்துவமிக்க வீரராக மாற்றுகிறது.

இதே பண்புகளையும் அதிரடியையும் ரிங்கு சிங் அப்படியே தக்கவைத்துக் கொள்ளும்பட்சத்தில் பெரிய பெரிய உச்சங்களை ரிங்கு சிங் விரைவிலேயே எட்டுவார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com