இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு ப்னிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று தரும் ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
தோனியின் அட்வைஸ் குறித்து பேசிய ரிங்கு சிங், “உலகின் சிறந்த ப்னிஷர் என்றால் அது தோனிதான். நான் பேட்டிங் செய்யும்போது எப்படி செயல்பட வேண்டும் என்று மகிபாயிடம் கேட்டேன். “ உனது திட்டத்தை எப்போதும் எளிமையாக வைத்துக்கொள். எந்த பந்தை வீசவேண்டும் என்பதை பௌலர் பார்த்துக் கொள்வார். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. பந்து எப்படி வருகிறது என்பதில் உன் முழு கவனத்தையும் செலுத்து.