red aval recipe for morning breakfast

Share

காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால்தான் அன்றை நாள் சுருசுருப்பாக அமையும். அதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும் உதவுகிறது. எனவே காலை உணவை ஹெல்தியாக்க சிவப்பு அவல் உப்புமா டிரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் – 1/2 கப்

தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 1

சமையல் எண்ணெய் – 2 tsp

வேர்க்கடலை – 1 tsp

காய்ந்த மிளகாய் – 4 tsp

தேங்காய் பால் – 1 கப்

சீரகம் – 1/2 tsp

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு

உப்பு – தே. அ

 

செய்முறை :

முதலில் கெட்டியான ஒரு கப் தேங்காய் பால் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அவலை கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

சுத்தம் செய்த அவளை தேங்காய் பாலில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

பின் வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் இரண்டையும் கொரக்கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொறிக்கவும்.

பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.

மதிய உணவுக்கு ராஜ்மா கிரேவி… இப்படி செஞ்சா ஒரு பருக்கை கூட மிஞ்சாது…

பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இரண்டும் நன்கு வதங்கியதும் ஊற வைத்த அவலை சேர்த்து பிரட்டவும்.

பின் உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்.

இறுதியாக அரைத்த வேர்க்கடலையை தூவி பிரட்டவும். பின் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் சிவப்பு அவல் உப்புமா தயார்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com