recipe of rajma gravy | மதிய உணவுக்கு ராஜ்மா கிரேவி… இப்படி செஞ்சா ஒரு பருக்கை கூட மிஞ்சாது… – News18 Tamil

Share

மதிய உணவுக்கு சுவை மிகுந்ததாக ஏதாவது சமைக்க வேண்டும் என நினைத்தால் இந்த ராஜ்மா கிரேவி செய்து பாருங்கள். எப்படி செய்ய வேண்டும் என தெரியாதா..?இதோ ரெசிபி…

தேவையான பொருட்கள் :

வேக வைக்க

ராஜ்மா – 1 கப்

பிரிஞ்சு இலை – 1

பட்டை – 1

உப்பு -1 tsp

சமைக்க

நெய் – 1 1/2 tbsp

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 3

சீரகம் – 1/2 tsp

வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 2

மஞ்சள் – 1/4

மிளகாய் தூள் – 1 tsp

தனியா தூள் – 1 tsp

சீரகத்தூள் – 1 /2 tsp

மேங்கோ பொடி – 1/2 tsp

கரம் மசாலா – 1/2 tsp

உப்பு – 1/2 tsp

கசூரி மேத்தி – 1 tsp

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

ராஜ்மாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். 12 மணி நேரம் ஊற வேண்டும்.

மறுநாள் குக்கரில் போட்டு பட்டை, இலை, உப்பு சேர்த்து 6 விசில் வர வேக வையுங்கள். தண்ணீர் கொட்டை மூழ்கும் வரை ஊற்றினால் போதும்.

வெந்ததும் தனியா வைத்துவிடுங்கள்.

சமைக்க கடாய் வைத்து நெய் விட்டு பட்டை , கிராம்பு , சீரகம் சேர்த்து பொறித்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

தஹி பூரி ரொம்ப பிடிக்குமா..? வீட்டிலேயே அடிக்கடி செஞ்சு சாப்பிட ரெசிபி இதோ…

வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி வதங்கி சுருங்கியதும் கொடுக்கப்பட்ட பொடிகள் அனைத்தையும் சேர்த்துகொள்ளுங்கள்.

சிறிது நேரம் வதக்கியதும் வேக வைத்த ராஜ்மாவை தண்ணீருடன் அப்படியே ஊற்றுங்கள். பின் கலக்கிவிட்டு உப்பு சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பின் தட்டுபோட்டு மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். தண்ணீர் வற்றி குழம்பு பதத்திற்கு கெட்டியானதும் கசூரி மேத்தியை கையில் கசக்கிப் போட்டு பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் ராஜ்மா குழம்பு பஞ்சாபி சுவையில் தயார். இதை சப்பாத்தி, சாதம் என எதற்கும் சாப்பிடலாம்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com