recipe of meal maker gravy or soya chunks gravy recipe

Share

எப்போதாவது வீட்டில் அசைவ உணவு செய்யக்கூடாது, செய்ய முடியாது என்கிற சூழல் வந்தால் இந்த மீல் மேக்கர் கிரேவி உங்களுக்கு உதவலாம். அதேபோல் அசைவம் விரும்பாதவர்களுக்கு சிக்கன் குழம்பு சுவையை சுவைக்க விரும்பினால் இந்த மீல் மேக்கர் கிரேவியை செய்து சாப்பிடலாம். சப்பாத்தி, நாண் ரொட்டி வகைகளுக்கு பக்காவான பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மீல் மேக்கர் – 100 கிராம்

தயிர் – 3 tbsp

வெங்காயம் -1

தக்காளி – 3

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – 3

எண்ணெய் – 4 tbsp

மிளகாய்த்தூள் – 1 tsp

மஞ்சள் – 1/2 tsp

சீரகத்தூள் – 1 tsp

கரம் மசாலா – 1 tsp

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தே.அ

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை தண்ணீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரைப் பிழிந்து மீல் மேக்கரை தனியாக எடுத்து அத்துடன், தயிர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி தனியாக எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.

நாட்டு சர்க்கரை சேர்த்து கேசரி செய்திருக்கிறீர்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ…

அதில், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் போட்டு கலக்கவும். அத்துடன், வெங்காயம் விழுது சேர்த்து வேக வைக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனைப் போன பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், மீல் மேக்கர், உப்பு, தண்ணீர் சேர்த்து கிளறி சுமார் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

இடையே, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி மீண்டும் 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி…

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com