“பஞ்சாப் வெற்றி!’
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது.
இந்தப் போட்டியைப் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
‘ஸ்ரேயாஷ் உறுதி!’
அவர் பேசியிருப்பதாவது, “வெரைட்டியான விஷயங்கள்தான் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கும். எல்லா விதமான ஆட்டங்களையும் நாங்கள் ஆடுவதில் மகிழ்ச்சிதான்.
பௌலிங்கில் நாங்கள் எதையுமே முன்கூட்டியே திட்டமிட்டு வைக்கவில்லை. உள்ளுணர்வின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுத்தேன்.