இப்படியிருக்க, நேற்றைய ஆட்டத்தில் ஐந்து விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஷீத் கான் (Rashid Khan), 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு பந்துவீச்சு ஜாம்பவான்களும் நிகழ்த்தாத அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, ரஷீத் கான் தன்னுடைய பிறந்தநாளான நேற்று ஐந்து விக்கெட் வீழ்த்தியதே அந்த சாதனை. இதற்கு முன்னர், எந்தவொரு பந்துவீச்சாளரும் தனது பிறந்தநாளன்று விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.
அதிகபட்சமாக, 2007-ல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர் வெர்னான் பிலாண்டர் 4 விக்கெட்டுகளையும், 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும்தான் சாதனையாக இருந்தது.
சற்று தாமதம்தான் இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய பந்துவீச்சால் தனிப்பட்ட உயரங்கள் மட்டுமல்லாது தனது அணிக்கும் வெற்றிகளை உரித்தாக்கி முன்னேறி கொண்டிருக்கும் இந்த தசாப்தத்தின் தவிர்க்க முடியாத மாயாஜால ஸ்பின்னர் ரஷீத் கான், மேலும் பல உச்சங்களைத் தொடப் பிறந்தநாள் வாழ்த்துகள்! கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ரஷீத் கானுக்கு வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.