அதனால், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் வெகு கனமழைப் பெய்ய வாய்ப்பிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மேலும், வரும் 23-ம் தேதி உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், 24, 25-ம் தேதிகளில், டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.