தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது என்றும், இது தீவிரமடைந்து அடுத்து இரண்டு நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதையொட்டி, நேற்று இரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோர பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஓ.எம்.ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.