Pushpa 2 : `எங்க போனாலும் நான் சென்னை தி.நகர் காரன்தான்!'- மாஸ் காட்டிய அல்லு அர்ஜூன்

Share

̀புஷ்பா 2′ திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிற நிலையில் படக்குழு இன்று சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலீலா, இயக்குநர் நெல்சன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.

விழாவில் பேசிய அல்லு அர்ஜுன், “நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். என் சென்னை மக்களுக்கு வணக்கம். மறக்க முடியாத நாள் இது. எத்தனையோ வருஷம் இதுக்காக எதிர்பார்க்கிறேன். புஷ்பா படத்துக்குப் பல இடங்களுக்குப் போனேன். ஆனால் சென்னைக்கு வரும்போது அதோட பீல் வேற. உங்கள் வாழ்க்கையில் முதல் 20 வருடம் எப்படி இருக்கிறீர்களோ, அப்படிதான் வாழ்க்கை முழுவதும் இருப்பீங்கனு உளவியல் ரீதியாக சொல்வாங்க. எங்க போனாலும் நான் சென்னை தி .நகர் காரன்தான். இந்த படத்துக்காக நான் மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறேன். என் ஊர்ல என்னுடைய படத்துக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்வு வேணும்னு விரும்பினேன். இன்னைக்கு அது நடந்திருக்கு.

நான் தமிழ்லதான் இன்னைக்கு பேசுவேன். இந்த மண்ணுக்கு நான் கொடுக்கிற மரியாதை அது. நான் நான்கு வருஷமாக ஒரே பெண்ணை பார்க்கிறேன். அந்த பெண் ராஷ்மிகாதான். என்னுடைய பெஸ்ட் கொடுக்க செய்ததற்கு நன்றி ராஷ்மிகா. ஶ்ரீ லீலா ஒரு பாடலுக்கு வர்றேன்னு சொன்னதும் நான் கொஞ்சம் தயாராகினேன். அந்த அளவுக்கு கடினமாக உழைக்கக்கூடியவர் ஶ்ரீ லீலா. நான் ஆரம்பத்துல ஒரு படம் பண்ணீட்டு ஒரு வருஷம் வீட்டுல இருந்தேன். அப்போ சுகுமார் எனக்கு ̀ஆர்யா’ படம் கொடுத்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்கள் பண்ணீட்டு இருக்கேன். என்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த நபர்களில் முக்கியமானவராக நான் அவரைதான் குறிப்பிடுவேன். இப்போகூட படம் தரமாக வரணும்னு ரொம்ப வேலை பார்த்துட்டு இருக்கார். அதுனாலதான் இங்க வரல. சின்ன வயசுல ரஜினி சார் படத்துக்கு அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கிப் பார்ப்பேன்.” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com