Pro Kabaddi 2022: பலம் சேர்க்கும் பவன் குமார்; இது தமிழ் தலைவாஸ் 2.0 – இந்த சீசனிலாவது சாதிக்குமா? | Team Preview of Tamil Thalaivas for Pro Kabaddi Season 9

Share

இளம் வீரர்களை நம்பியே தமிழ் தலைவாஸின் டிஃபன்ஸ் இருக்கிறது. அகிலேஷ் கடந்த சீசனில் பல புள்ளிகளை பெற்று ஃபார்மில் இருக்கிறார். பிரச்னை என்னவென்றால் அதிக அட்வான்ஸ் டேக்கிள் செய்வது. கடந்த சீசனில் ஆஷிஷ், அன்கிட், மோஹித், அபிஷேக் அகியோர் பல அட்வான்ஸ் டேக்கிள் செய்து எதிரணிகளுக்குத்தான் புள்ளிகளைக் கொடுத்தார்கள். மோசமான டிஃபன்ஸ் ஆட்டத்தால் சில நேரங்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டத்தின் முடிவே மாறிவிடுகிறது. கடந்த எல்லா சீசன்களிலும் இப்பிரச்னை இருந்தது. டிஃபன்ஸில் இன்னும் கவனம் செலுத்தினால் மட்டுமே தமிழ் தலைவாஸுக்கு வெற்றிகள் கிட்டும். அனுபவமுள்ள மூத்த வீரர்கள் அணியில் இல்லாதது தமிழ் தலைவாஸுக்குக் கூடுதல் சவால்களைக் கொடுக்கும்.

Tamil Thalaivas

Tamil Thalaivas
Tamil Thalaivas

பவன் குமாரை மட்டும் சார்ந்திருக்காமல் பிற வீரர்களும் வெற்றிக்காக  உழைத்திட வேண்டும். ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்படுவது தமிழ் தலைவாஸுக்கான சவாலாக இருக்கும். கடந்த சீசன்களின் மோசமான பெர்ஃபார்மென்ஸை மறந்து இந்த சீசனிலிருந்து புதிய பயணத்தைத் தமிழ் தலைவாஸ் தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ரைடர்கள்:

பவன் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு சிங்

டிஃபன்ட்டர்கள்:

சாகர், சாஹில், எம்.அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிஃப் ரப்பானி (வங்காளதேசம்), அர்பித் சரோஹா, அங்கித்

ஆல்ரவுண்டர்கள்:

தனுஷன் லக்ஷ்மமோகன் (இலங்கை), விஸ்வநாத்.வி, கே.அபிமன்யூ

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com