Pregnant lady harika dronavalli won bronze in Chennai chess olympiad

Share

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி கடந்த 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் அனைவரும் பாராட்டும் படி சிறப்பாக நடத்தியது தமிழக அரசு.

மேலும் இந்த போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி வழங்கியது தமிழக அரசு. இதில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றவர் ஹரிகா துரோணோவள்ளி. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா நிறைமாத கர்பிணியாக உள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்ட டுவீட்டில், “நான் இந்திய மகளிர் அணியில் சேர்ந்து 18 ஆண்டுகள் ஆகிறது. 13 வயதில் விளையாட தொடங்கிய நான் இதுவரை 9 ஒலிம்பியாட்களில் விளையாடி உள்ளேன். மேலும் இந்திய அணியின் பதக்க மேடையில் ஏற வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதை இம்முறை சாத்தித்துள்ளேன்.

நான் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது இது நடந்திருப்பது மேலும் உணர்ச்சியான தருணம். செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடக்கிறது என தெரிந்தவுடன், எனது மருத்துவர், நான் ஆரோகியத்துடன் இருந்தால் ஒலிம்பியாடில் பங்கேற்கலாம் என சொன்னதிலிருந்து, என் மனது நான் எப்போது ஒலிம்பியாடில் பங்கேற்பேன், பதக்கத்தை வெல்வேன் என்பதையே சிந்தித்துக் கொண்டு இருந்தது. எனது ஒவ்வொரு முயற்சியும் அதை நோக்கியே இருந்தது.

இதையும் படிங்க: பார்முக்கு வந்தார் கேன் வில்லியம்சன் – முதல் டி20-யில் நியூசிலாந்து வெற்றி

வளைகாப்பு, விருந்து, கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். எல்லாமே ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற பிறகு தான் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தேன். நன்றாக விளையாட வேண்டும் என ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தேன். இந்த தருணத்திற்காக தான் கடந்த பல மாதங்களாக காத்திருந்தேன். இறுதியில் நான் வென்றுவிட்டேன். இந்திய மகளிர் பெரும் முதல் செஸ் ஒலிம்பியாட் பதக்கம் என்பதில் பெருமை” என்று பதிவிட்டிருக்கிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com