Poo pills: ஆன்டிபயாடிக் மருந்துகளால் தடுக்க முடியாத பாக்டீரியாவை மல மாத்திரை அழிக்குமா?

Share

சூப்பர்பக்ஸ், பாக்டீரியாக்கள், நுண்ணுயிர் எதிர்ப்பி

பட மூலாதாரம், GSTT

ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட “poo pills” பயன்படுத்தி பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன.

இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என அழைக்கப்படுகிறது. சூப்பர்பக்ஸ்களால் ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் உயிரிழப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தொற்றுகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறை இது என்றே சொல்லலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com