Pongal Recipe 2023 | இந்த பொங்கலுக்கு வித்தியாசமாக வெஜிடபிள் பொங்கல் செய்து பாருங்கள்!

Share

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த வெஜிடபிள் பொங்கலை செய்து பாருங்கள்.. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள். இந்த பொங்கலுக்கு சட்னி சாம்பார் ஏதும் தேவைப்படாது. விருப்பப்பட்டால் தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான அளவு :

பாசிப்பருப்பு ( வறுத்தது ) – 100 கிராம்

அரிசி – 1/4 கிலோ

கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பட்டாணி – தலா 1 கப்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு ( துருவியது )

மிளகு – 20

சீரகம் – 1 டீஸ்பூன்

நெய் – 100 மில்லி

வறுத்த முந்திரி பருப்பு – 10

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • அரிசி, பாசிப்பருப்பை கலந்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
  • பின்னர் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுக்கவும்.
  • நறுக்கிய, துருவிய காய்கறிகள் எல்லாவற்றையும் கடாயில் போட்டு,நெய்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வேக வைத்த சாதத்துடன் வதக்கிய காய்கறிகள், வறுத்த மிளகு. சீரகம், முந்திரி,நெய் சேர்த்து நன்கு கிளறவும். வெஜிடபிள் பொங்கல் தயார்.

Also Read :  Pongal Recipe 2023 | கோவில் பிரசாதம் ஸ்டைலில் வெண் பொங்கல் செய்யனுமா? ரகசியம் இதுதான்!

குறிப்பு : இந்த பொங்கலில் விருப்பப்பட்ட எந்த காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் நீர் காய்களை தவிர்த்து விடுவது நல்லது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com