Pongal Recipe 2023 | இதுவரை அவல் பொங்கல் ட்ரை பண்ணிருக்கீங்களா? ரொம்ப ஈஸி.. இதோ ரெசிபி.!

Share

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த அவல் பொங்கலை செய்து பாருங்கள்.. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள்.

தேவையான பொருட்கள்:

அவல் – 1 1/2 கப்

பாசிப்பருப்பு – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

முந்திரிப்பருப்பு – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்துமல்லி – அலங்கரிக்க

செய்முறை:

  • பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும் அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.
  • அடுப்பை ஏற்றி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்த பொருட்களைப் போட்டு வறுக்கவும். வறுத்தவற்றுடன் அவல் சேர்த்து வதக்கவும்.
  • குக்கரில் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பினை அவல், தாளித்த பொருட்களுடன் சேர்த்து உப்பு, பெருங்காயம் சேர்த்து 3 டம்ளர் அளவு தண்ணீரைச் சேர்க்கவும். கிளறி விடவும்.
  • அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். பொங்கல் தயாரானதும் நெய் சேர்த்துக் கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

குறிப்பு : இந்த அவல் பொங்கலில் விரும்பினால் பச்சை பட்டாணியை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com