‘Please Update and Restart’ – ஆதிகாலத்து அணுகுமுறையிலிருந்து விடுபடுமா இந்திய அணி? – T20 WorldCup – Changes needed in India’s approach

Share

இதெல்லாம் அந்த நாளை பொறுத்தது. இது ஸ்கோரில் பெரிய மாற்றத்தை கொண்டு வராது. எது ஸ்கோர், வெற்றி, தோல்வி என அனைத்திலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றால் ஒரு வீரர் எத்தனை பந்துகளை பிடித்து எத்தனை ரன்களை அடிக்கிறார் என்பதுதான். 25 ரன்கள் அடிக்க 12 பந்துகள் எடுத்துக் கொள்ளும் வீரர் தான் டி20 இல் சூப்பர்ஸ்டார். அதே 25 ரன்களை எடுக்க ஒருவர் 20 பந்துகளை எடுத்தால் அணியின் ஸ்கோரை அது பாதிப்பது மட்டுமல்லாது பின் வரும் வீரர்களுக்கான வாய்ப்பையும் அது கெடுத்து விடுகிறது.

சரி எல்லா வீரர்களும் இப்படி அதிரடியாக தான் விளையாட வேண்டுமா என்றால் இல்லை தான். ஒரு நிதானமாக ஆடும் வீரரை சுற்றி அதிரடி வீரர்கள் இருக்குமாறு அணியைக் கட்டமைக்க வேண்டும்.

இங்கிலாந்து ஸ்டோக்ஸ் அல்லது மலானை சுற்றி பட்லர், ஹேல்ஸ், சால்ட், மொயீன், லிவிங்ஸ்டன் என வைத்திருப்பது போல. நிதானமான வீரர் என்றாலும் குறைந்தது அவர் அவுட் ஆகும் போது 150 ஸ்ட்ரைக் ரேட் இருந்தால் அணி நல்ல நிலையில் இருக்கும். Anchor (தொடர் விக்கெட்டுகள் விழாமல் காக்கும் பொறுப்பு) என்பதற்காக ஒரு பவுண்டரி அடித்து விட்டு இரண்டு மூன்று பந்துகள் ரன் எடுக்காமல் விட்டுவிட்டால் சிக்கல் தான்.

இப்போது இந்திய அணியில் இருக்கும் பிரதான பிரச்சனை இது தான்.

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

இந்த நிதான அணுகுமுறை காரணமாக பத்து ஓவர்களில் வெறும் 60 ரன்கள் தான் பெற முடிகிறது. எல்லா பந்தையும் எப்படி அடிக்க முடியும் என்ற கேள்வி நியாயம் தான். பவர்பிளேயில் கிடைக்கும் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் வந்தாலே நாற்பது ரன்கள் வந்துவிடும். ஆனால் இந்தியா அரையிறுதியில் வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இந்தியா இழந்திருந்தது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com