Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' – ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

Share

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

பியூஸ் சாவ்லா
பியூஸ் சாவ்லா

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் பியூஷ் சாவ்லா, “களத்தில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த அழகான விளையாட்டிலிருந்து விடைபெறவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது முதல் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணிகளில் ஒரு பகுதியாக இருந்தது வரை இந்தப் பயணத்தில் ஒவ்வொரு தருணத்திலும் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

இந்த நினைவுகள் என்றென்றும் என் இதயத்தில் பதிந்திருக்கும். என்மீது நம்பிக்கை வைத்த பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என் கரியரில் ஐபிஎல் ஒரு ஸ்பெஷல் அத்தியாயம். அதில் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன்.

பியூஸ் சாவ்லா - டி20 உலகக் கோப்பை
பியூஸ் சாவ்லா – டி20 உலகக் கோப்பை

என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றியதற்காக எனது பயிற்சியாளர்கள் கே.கே. கௌதம், மறைந்த பங்கஜ் சரஸ்வத் ஆகியோருக்கு நன்றி.

என்னுடைய அனைத்து துயரங்களுக்கும் எனது குடும்பத்தின் ஆதரவுதான் அடித்தளம்.

குறிப்பாக, என்மீது நம்பிக்கை வைத்து என் பாதையை ஒளிரச் செய்தவர் என் தந்தை. அவர் இல்லாமல், இந்தப் பயணம் ஒருபோதும் சாத்தியமில்லை.

பியூஸ் சாவ்லா - 2011 உலகக் கோப்பை
பியூஸ் சாவ்லா – 2011 உலகக் கோப்பை

ஒரு கிரிக்கெட்டராக நான் வளர்வதற்கு வாய்ப்பளித்த குஜராத் கிரிக்கெட் சங்கம், உ.பி கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ ஆகியவற்றுக்கு நன்றி.

இன்றைய நாள் எனக்கு மிகவும் எமோஷனலானது. சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டுகளிலிருந்தும் ஓய்வை அறிவிக்கிறேன்.

நான் கிரிக்கெட்டை விட்டுச் சென்றாலும், கிரிக்கெட் எப்போதும் என்னுடன் வாழும்.

இந்த விளையாட்டின் பாடங்களோடு ஒரு புதிய பயணத்தைத் தொடங்க நான் இப்போது ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

பியூஷ் சாவ்லாவின் சில சாதனைகள்!

2006-ல் 17 வயதில் இங்கிலாந்துக்கெதிராக இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்கி, சச்சினுக்குப் பிறகு குறைந்த வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தவர் என்ற சாதனையை இன்று வரை தக்கவைத்திருக்கிறார்.

2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் (15 பேர் பட்டியல்), 2011-ல் உலகக் கோப்பை வென்ற அணியிலும் (3 போட்டிகள்) இடம்பிடித்திருந்தார்.

பியூஸ் சாவ்லா - 2014 ஐபிஎல் KKR
பியூஸ் சாவ்லா – 2014 ஐபிஎல் KKR

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 192 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 2014 ஐபிஎல்-லில் பஞ்சாப்புக்கெதிரான இறுதிப்போட்டியில் வின்னிங் ஷாட் அடித்தார் (KKR).

உள்ளூர் கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 1,000-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com