Permission will be given to hold artistic performances at Chennai Nehru Indoor Stadium

Share

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இதற்கான அறிமுக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அம்ரித்ராஜ் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா, துறை சார்ந்த உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, காணொளி வாயிலாக பேசிய அமைச்சர் மெய்யநாதன், இந்த போட்டியினை உலக அளவில் கவனம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணுவதற்கு இணங்க, இதை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டு அரங்கில் மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் 2022 போட்டிகள் நடைபெற உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த போட்டிகள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்தி முடிக்கப்படும். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உலக டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு நன்றி என்றார்.

தொடர்ந்து, காணொளி மூலம் பேசிய பேசிய விஜய் அமிர்தராஜ், இந்தியாவின் முதல் தரத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் இதில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச கால அட்டவணைகள் பொறுத்து, தமிழ்நாட்டில் ஆடவருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மீண்டும் அடுத்த வருடம் நடத்த திட்டமிடப்படும் எனவும், சானியா மிர்சாவின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்ட பின், ஓய்வு அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அவருக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் பேசினார்.

தொடர்ச்சியாக துறை சார்ந்த முதன்மை செயலாளர் அபூர்வா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னையில் முதல்முறையாக பெண்களுக்கான டென்னிஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் அதிகமான பெண்கள் விளையாட வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. கடந்த காலங்களில் மகளிர், விளையாட்டு துறையில் அதிகப்படியான சாதனைகளை புரிந்து வருகிறார்கள். சர்வதேச ஆடவர் டென்னிஸ் விளையாட்டுப்போட்டி முடிந்ததும் மீதமிருக்கும் பந்துகள், டென்னிஸ் ராக்கெட் போன்றவை அரசு பள்ளிகளுக்கு வழங்கி வீராங்கனைகள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

சமீபத்தில் கூட ஜெர்லின் அணிகா பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம் வென்று சாதனை படைத்தார்.

கொரோனாவால் செயல்படாமல் இருந்த மைதானங்கள் தற்பொழுது மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. பறவைகளின் கூடாரமாக மாறியிருக்கும் மைதானங்களை சரி செய்து விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படும், ஆனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதி கிடையாது. கொரோனா காரணமாக மைதானங்கள் சேதமடைந்துள்ளன, இனிமேல் தான் போட்டிகள் நடத்தி மைதானம் பராமரிக்கப்படும்.

நேரு உள் விளையாட்டு அரங்கம் பயிற்சிக்கான அரங்கம் அல்ல, அது விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான அரங்கம். தமிழ்நாட்டில் ஒலிம்பிக் அகாடமி துவங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்.

அடுத்த மாதம் தமிழகத்தில் தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com