PBKS Vs GT: ‘8 ரன்களில் 3 விக்கெட்’ – சரிந்த பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு திருப்பிய ‘தனி ஒருவன்’ யார்?

Share

ஐபிஎல், குஜராத், பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இன்று நடந்த ஐபிஎல் 2026 4வது போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

பஞ்சாப் அணி வெற்றி பெற குஜராத் டைட்டன்ஸ் அணி 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சாய் சுதர்ஷன் மற்றும் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில் நான்காவது ஓவரில் மார்கோ யான்சனின் பந்துவீச்சில் சாய் சுதர்சன் (11 பந்துகளில், 16 ரன்) ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜோஸ் பட்லரும் ஷுப்மன் கில்லும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இருவரும் இணைந்து 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஷுப்மன் கில் (27 பந்துகளில் 39 ரன்கள்) ஆட்டமிழந்தார். நான்காவது பேட்டராக களமிறங்கிய க்ளேன் பிலிப்சும் பெரிதாக சோபிக்கவில்லை. ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய பிலிப்ஸ் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com