PBKS vs GT: கடைசி நேரத்தில் ‘பயங்காட்டிய’ பஞ்சாப்; த்ரில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ்

Share

IPL

பட மூலாதாரம், BCCI/IPL

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைடன்ஸ். சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சுப்மல் கில் க்ளீன் போல்டாக ஆட்டம் சூடுபிடித்தது. இருந்தாலும் போட்டியை பவுண்டரி அடித்து முடித்து வைத்தார் ராகுல் தேவாட்டியா.

அதிர்ச்சி கொடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்

பட மூலாதாரம், BCCI/IPL

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணி தரப்பில் வழக்கம்போல பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். ஆட்டத்தின் 2வது பந்திலேயே பிரம் சிம்ரனை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஷமி.

4வது ஓவரில் லிட்டில் ஷிகர் தவானை 8 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். 28 ரன்களில் 2 விக்கெட் இழந்து தடுமாறியது பஞ்சாப் கிங்ஸ். அடுத்து வந்த மேட் ஷார்ட் சற்று நிதானம் காட்ட, 36 ரன்கள் எடுத்து ரஷீத் கான் சுழலில் சிக்கினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com