அந்த வீடியோவில் ஹேமா “ எனக்கு நல்லாவே சமைக்க தெரியும். ஓரளவேனும் சாப்பிடும்படியாக சமைப்பேன் என்று கூறியுள்ளார். அதோடு அதை நிரூபிக்கும் விதமாக உங்களுக்காக சீஸி ஒயிட் சாஸ் மக்ரோனி சமைத்து காட்டப்போகிறேன் என வித்தியாசமாக செய்து அசத்துகிறார். அதோடு இதை பெரிய கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டும் எனில் குறைந்தபட்சம் 350 ரூபாய் இருக்கும். ஆனால் இதை வீட்டில் செய்வது மிக மிக எளிமையானது. அவ்வளவு பொருட்செலவும் ஆகாது என்கிறார். சரி அவருடைய ரெசிபியை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மக்ரோனி – 1 கப்
எண்ணெய் – 1/2 tsp
கேரட் – 3 tsp
ஸ்வீட் கார்ன், குடைமிளகாய் – 2 tsp
ஒரிகனோ – 1/4 tsp
ஒயிட் சாஸ் செய்ய :
வெண்ணெய் – 3 tsp
பால் – 1/2 கப்
மைதா – 1/4 கப்
உப்பு – தே.அ
சீஸ் – 3 ஸ்லைஸ்
செய்முறை :
முதலில் மக்ரோனியை வேக வைக்க வேண்டும். அதற்கு பாத்திரத்தில் மக்ரோணி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் கேரட், கார்ன் , குடைமிளகாயை எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக சாஸ் செய்ய கடாயை மிதமான சூட்டில் வைத்து வெண்ணெயை உருக்க வேண்டும்.
பின் பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். கொதித்ததும் மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு கிளறி கெட்டிப்பதம் வரும் போது வதக்கிய கேரட் , கார்ன், குடைமிளகாய் கலவையை சேர்க்க வேண்டும்.
பின் மக்ரோனியை சேர்த்து ஓரிகனோவை தூவி நன்கு கிளறுங்கள்.
இறக்குவதற்கு சில நொடிகளுக்கு முன் சீஸ் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் சீஸ் ஒயிட் சாஸ் மக்ரோணி தயார்.
இதை வீட்டில் நீங்களும் செய்து அசத்துங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.