பாபர் அசாம், வேண்டவே வேண்டாம் என்று கூறும் ஒரு மூத்த வீரர் சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக், இவர் 124 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார், இன்னும் கூட நன்றாகவே ஆடுகிறார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக்கோப்பையில் 40 வயது ஷோயப் மாலிக்கின் பங்களிப்பு மிக மிக முக்கியமாக இருக்கும் என்று நம் மீடியாக்கள் எப்படி தோனிக்கு புகழாரம் சூட்டுவதையே வேலையாக வைத்திருந்தது போல் அங்கு ஷோயப் மாலிக் வேண்டும் என்று கூறி வருகின்றன.
ஆனால் பாபர் அசாம், ஷோயப் மாலிக்கோ, முகமது ஹபீஸோ தேவையில்லை, அணிக்குத் தேவை இளம் ரத்தம் என்கிறார்.
“நெதர்லாந்துக்குப் பிறகு உடனேயே போட்டிகள் உள்ளன. எனவே மாற்றங்களுக்கு நேரமில்லை. மூத்த வீரர்கள் அணியை விட்டு போய்விட்டார்கள், இளம் வீரர்களே அவர்கள் இடத்தை நிரப்ப வேண்டும். ஹபீஸ், ஷோயப் மாலிக் பெரிய வீரர்கள்.
அவர்களை இழந்துள்ளோம் என்பது உண்மைதான், ஆனால் அவர்களது பெரிய இடத்தை ஆசிப் அலி, குஷ்தில் ஷா, இப்திகார் அகமது ஆகியோர் நிரப்ப வேண்டும். இவர்களுக்கு நிறைய போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும், இந்த வீரர்கள்ள் நன்றாக ஆடியுள்ளனர்” என்றார்.
பாகிஸ்தான் அணி நெதர்லாந்து தொடரை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 28ம் தேதி ஆசியக் கோப்பையில் முதல் போட்டியிலேயே இந்திய அணியை எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.