Pak vs Eng: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி; பாகிஸ்தானுக்குத் தொடரும் சொந்த மண் சோகம் | England beat Pakistan by an innings and 47 runs in the first Test in Multan

Share

சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது இங்கிலாந்து. நடப்பு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 5வது நாள் முடிவில் 220 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து தோல்வியடைந்திருக்கிறது பாகிஸ்தான் (அப்ரர் அஹமத்தால் பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறினார்). இதனால் 47 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைத் தனதாக்கியிருக்கிறது இங்கிலாந்து.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. அப்துல்லா ஷபீக் (102), ஷான் மசூத் (151), சல்மான் அலி அகா (104) ஆகிய மூன்று வீரர்கள் சதம் விளாச, 556 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி.

நல்ல ரன் சேர்ப்பு என்றாலும் 2021ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் அணி வெற்றிபெறாததால் ரசிகர்கள் பதற்றமாகவே இருந்தனர்.

இரண்டாம் நாளில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஜோ ரூட் (262) மற்றும் ஹேரி புரூக் (317) அட்டகாசத்துடன், 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது இங்கிலாந்து அணி.

இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்கள் முன்னிலையிலிருந்தது இங்கிலாந்து. இங்கிலாந்து பௌலர்களிடம் சிக்கித் தவித்த பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் தாறுமாறாக அதிகரித்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com