“”எங்களுக்கு எதுவும் தெரியாது’ என நாங்கள் பதிலளித்தோம். அடுத்த நொடியில் என் தந்தையை நோக்கி சுட்டான். என் மகன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் அவர்கள் வேறுபக்கமாக நடந்து சென்றனர். என் தந்தை இறந்துவிட்டார் என எனக்குப் புரிந்தது, நான் என் மகன்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். எங்கே செல்கிறேன் எனத் தெரியாமல் நடக்கத் தொடங்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
சிக்னல் கிடைத்த உடனேயே ஓட்டுநர் முசாஃபிருக்கு கால் செய்துள்ளார் ஆர்த்தி.
இந்த பேரச்சம் சூழ்ந்த நிலையில் இரண்டு காஷ்மீர் ஆண்கள் வெளிப்படுத்திய கரிசனத்தை நினைவு கூர்ந்துள்ளார் ஆர்த்தி.
“எங்கள் ஓட்டுநர் முசஃபிசூரும், சமீர் என்ற மற்றொரு நபரும் என் சகோதரர்களாக மாறிவிட்டனர். எல்லாவற்றிலும் அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். பிணவறைக்கு என்னுடன் வந்தனர், ஃபார்மாலிட்டிகளில் உதவினர், அதிகாலை 3 மணிவரை அங்கேயே காத்திருந்தேன், என்னை ஒரு தங்கையைப் போல கவனித்துக்கொண்டனர்” எனக் கூறியுள்ளார்.
ஆர்த்தி ஶ்ரீநகரில் இருந்து வெளியேரும்போது, “எனக்கு இப்போது காஷ்மீரில் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அல்லாஹ் உங்கள் இருவரையும் பாதுகாக்கட்டும்.” என அவர்களிடம் கூறியுள்ளார்.
இந்த கடினமான சூழலைக் கடந்து வந்தது பற்றி, “நான் ஸ்ட்ராங்காக இருப்பதுபோல காட்டிக்கொண்டேன். என் அம்மாவையும் மகன்களையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் என்னால் சோர்ந்து விட முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.