மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். கோபம் மற்றும் ஈகோ முன்பின் தெரியாத ஒரு நபரையே கொலை செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறது. சகிப்புதன்மை இல்லாதது, பொறுமையின்மை என இதற்கு எந்தப் பெயர் வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன என்பதுதான் கவலை கொள்ளச் செய்யும் விஷயம்.
கோபம், ஈகோ இரண்டும் எத்தனை அபாயகரமானது, அதுபோன்ற நேரங்களில் மனதைக் கட்டுப்படுத்துவது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் லட்சுமி பாய்.
“நம்மில் பல பேருக்கு மனநலப் பிரச்னைகள் இருக்கும். சிலருக்கு வெளிப்படையாகத் தெரியும். சிலருக்கு பாதிப்பு இருப்பது வெளிப்படையாகத் தெரியாது. மீறித் தெரிந்தாலும் அதை வெளியில் சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. குடும்பத்தில் இருப்பவர்களும் அதை சகித்துக்கொள்வார்கள்.