onam 2022 special day sweet recipe to eat

Share

ஓணம் என்றாலே ஸ்பெஷல் தான். அறுவடை திருநாளாக தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப் படுகிறதோ, அதே போல, கேரளாவின் அறுவடை  திருநாளாக ஓணம் 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, ஓணம் செப்டம்பர் 8 (வியாழன்) அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கே உரிய உணவுகள் விஷேசமாக சமைக்கப்படும். அந்த வகையில், ஓணம் பண்டிகைக்கு குறைந்தது 21 உணவுகள் பரிமாறப்படும்; இந்த விருந்துக்கு ஓணம் சத்யா (Sadya) என்று பெயர். இவற்றில், இனிப்புகளுக்கு தனி இடம் உள்ளன. நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய 5 சுவையான ஓணம் பண்டிகை இனிப்புகளின் ரெசிபி இங்கே.

உன்னி அப்பம்:

பணியாரம் பல ஊர்களில் இனிப்பு, காரம், புளிப்பு என்று பல சுவைகளில் வெவ்வேறு ஊர்களில் கிடைக்கின்றன. இதில் கேரளாவின் பாரம்பரிய இனிப்பாக இருக்கிறது உன்னி அப்பம். அரிசி மாவில், பழுத்த வாழைப்பழம், வெல்லப்பாகு, ஏலக்காய், வறுத்த தேங்காய்த் துண்டுகள் சேர்த்து நெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான உன்னி அப்பம் தயார்.

உலர்பழங்கள் கேசரி:

கேசரி மிகவும் பிரபலமான இனிப்பு. இன்ஸ்டன்ட் இனிப்பாக பல நேரத்தில் கேசரி கைகொடுக்கும். ரவையில் செய்யப்படும் கேசரியை சில இடங்களில் ரவா அல்வா என்றும் கூறுவார்கள். கேசரியில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் பாரம்பரியமான உலர் பழங்கள் கேசரி. பொதுவாக பெரும்பாலான இடங்களில் ரவையைப் பயன்படுத்தி கேசரி செய்தாலும், கேரளாவின் பாரம்பரியமான இந்த இனிப்பில், அரிசி மற்றும் உலர்பழங்கள் பயன்படுத்தி செய்யப்படுகின்றது.

அச்சப்பம்:

இனிப்பு முறுக்கு, அச்சு முறுக்கு என்று லேசான இனிப்பு  சுவையுடன் இந்த முறுக்கை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். கேரளாவில் இதன் பெயர் அச்சப்பம். வட்ட வடிவில், சிறிய சிறிய கட்டங்களாக இதை எப்படி செய்திருப்பார்கள் என்று ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். மற்ற இனிப்புகளைப் போல அல்லாமல், கரகரவென்று முறுக்கு போலவும், திகட்டும் இனிப்பாக இல்லாமல், லேசான தித்திப்புடன் சுவையாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் அரிதான இனிப்பு வகைகளில் அச்சப்பமும் ஒன்று.

Also Read : Onam 2022 : திருவோணத் திருநாளன்று கேரள கசவு சேலை கட்டி அசத்துங்கள்…

கொழுக்கட்டை:

விசேஷ தினங்களில் செய்யப்படும் கொழுக்கட்டை, ஓணம் பண்டிகையில் பல வகைகளில் இடம்பெறும். தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், பாசிப்பருப்பு, தேங்காய் வெல்லக் கொழுக்கட்டை, தேங்காய், கடலை பருப்பு மற்றும் சர்க்கரை கொழுக்கட்டையும் செய்யப்படும்.

பருப்பு  பாயசம்:

பாலாடைப் பிரதமன் என்ற அரிசி பாயசத்தின் வகையைப் போலவே, ஓணம் பண்டிகையின் போது செய்யப்படும் பருப்பு பாயாசத்தின் சுவையே தனி. கடலை பருப்பை தேங்காய்ப் பாலில் வேக வைத்து, வெல்லம், நெய் சேர்த்து குறைந்த தீயில் கெட்டியாகும் வரை செய்யப்படும் பாயசத்தின் மணமே பசியைத் தூண்டும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com