“ஆண்கள் தங்களது உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். மேலும் அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை குறித்து மருத்துவர்களிடம் பேச தயக்கம் காட்டக்கூடாது. புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் அதை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் ரெகுலர் செக் அப்களை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்” என்று கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர் மருத்துவர் வைத்தீஸ்வரன் கூறினார்.
காவேரி மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறை தலைவர் மருத்துவர் வேல்முருகன் தேசிங் பேசியாதாவது, “புற்றுநோய் ஆண், பெண் என யாருக்கும் பாகுபாடு காட்டாது. அதனால் ஆண்களும் தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது அவசியம்” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை கதிர்வீச்சு சிகிச்சையியல் இயக்குநர் மருத்துவர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காது, மூக்கு, தொண்டை பிரிவின் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நீரஜ் ஜோஷி கூறுகையில், “புற்றுநோய் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் 99 சதவிகிதம் குணப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இது வெறும் ஆண்களுக்கான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல. இது ஆண்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வும் கூட” என்றார்.