அந்த கேள்விகளுக்கெல்லாம், தனது ஆட்டத்தால் நிதிஷ் குமார் ரெட்டி பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், முதல் டெஸ்டில் நிதிஸ் குமார் ரெட்டியை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வியெழுப்பிய கவாஸ்கர், தற்போது அவரை ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ்டார் (Sportstar) இதழில் ஒரு கட்டுரையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இல்லாததிலிருந்து அவரது இடத்துக்கு ஒரு ஆல்ரவுண்டரை இந்தியா தேடிவருகிறது. அதில், நிதிஷ் குமார் ரெட்டி, பந்துவீச்சில் ஓரளவுக்கு கைகொடுத்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக பாண்டியாவை சிறந்தவர். இதற்கான கிரெடிட் அஜித் அகார்கார் மற்றும் சக தேர்வாளர்களுக்கும். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டிலேயே, சூழ்நிலைகளைப் புரிந்து விளையாடக்கூடிய வீரர் அவர் என்று தெளிவாகியது. அடுத்தடுத்த போட்டிகளில் அது மேலும் வலுவடைந்தது.” என்று கவாஸ்கர் பாராட்டியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா கடைசியாக 2018-ல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.