NEP vs UAE | மரத்தில் ஏறி போட்டியை கண்டுகளித்த நேபாள கிரிக்கெட் ரசிகர்கள் | fans go craze to watch on sitting top of tree nepal versus uae odi match

Share

கிர்திபூர்: நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூர் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண ஒரே நேரத்தில் பல்லாயிர கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்த காரணத்தால் போட்டியை காணும் ஆவலில் மரத்தின் உச்சியில் ஏறி போட்டியை சில ரசிகர்கள் பார்த்திருந்தனர். இந்தப் படங்கள் உலக அளவில் கவனம் பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது அந்த அணி. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் டிஎல்எஸ் முறையில் ஆட்டம் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 261 ரன்கள் நேபாள அணிக்கான இலக்கு. 269 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.

இது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் டூ 2019-23 (ICC Cricket World Cup League Two 2019-23) தொடராகும். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் உலகக் கோப்பை குவாலிபையருக்கு தகுதி பெற்றுள்ளது நேபாளம்.

நேபாள நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை நேரடியாக பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த போட்டிக்கு அதிக ரசிகர்கள் திரள காரணம் நேபாள அணியின் உலகக் கோப்பை குவாலிபையர் சுற்றுக்கு இந்தப் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது. மைதானம் ஹவுஸ்-புள் ஆன காரணத்தால் ரசிகர்கள் மரத்தின் மீது ஏறி போட்டியை பார்த்திருந்தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com