தீபாவளி நெருங்கியாச்சு! புதுத்துணி, பலகாரம் என வீடே களைகட்டப் போகுது. அப்படி இருக்கும்போது நொறுக்குத் தீனிகளை யார் தான் விரும்ப மாட்டார்கள்? அதிலும் குறிப்பாக செட்டிநாடு தின்பண்டங்களுக்கு இருக்கும் கிரேஸ் மக்கள் மத்தியில் என்றுமே குறைவதில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிற்றுண்டி வகைகளை மிகவும் தரமான முறையில் செட்டிநாட்டின் பாரம்பரிய மணம் சிறிதும் குறையாமல் நமக்கு வழங்கி வருகிறார்கள் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் நிறுவனத்தினர். உலகெங்கிலும் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பகிர்கிறார் இதன் நிறுவனர் திரு. R. திண்ணப்பன்.
அஸ்திவாரம் போட்ட பாட்டி:
“என் பெற்றோர் வி. ராஜேந்திரன் – ஆர். சிவகாமி அம்மாவின் உறுதுணை மற்றும் ஆசியுடன் 2003-ம் ஆண்டு சிறிய முதலீட்டில் சிற்றுண்டி நிறுவனம் ஒன்றை மிக சிறிய அளவில் வாடகை இடத்தில் துவங்கினேன். இந்தத் தொழிலுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்னுடைய பாட்டி கொடுத்த சமையல் குறிப்பு. செட்டிநாட்டின் மிகவும் பிரபலமான சிற்றுண்டி வகைகளில் ஒன்றான சீப்பு சீடையுடன் வியாபாரத்தைத் தொடங்கினேன். அதற்கு கிடைத்த நல்ல வரவேற்பை உந்துதலாக வைத்து ஒவ்வொரு செட்டிநாடு சிற்றுண்டியாக அறிமுகப்படுத்தி இன்று மதுரையின் முன்னணி ஸ்தாபனமாக வளர்ச்சி அடைந்துள்ளோம். செட்டிநாடு சிற்றுண்டிகளை விரும்புகிறவர்கள் நாடும் பிரபலமான இடமாக விளங்குகிறது அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்.
நிறுவனத்தின் வளர்ச்சி:
படிப்படியாக வியாபாரம் சூடுபிடித்தாலும் வாடகைக்கு இருந்த இடத்தில் அக்கம் பக்கத்தினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அவை அனைத்தையும் படிப்படியாக சமாளித்து 2008-ம் ஆண்டு சிட்கோவில் சொந்த இடம் ஒன்றை பெற்றோரின் ஆதரவுடன் வாங்கி, தொழிலை மேம்படுத்தினேன். 2010ம் ஆண்டு வரையில் சிற்றுண்டி வகைகளின் தயாரிப்பு மட்டுமே செய்து வந்த அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ், பின்னர் இனிப்பு வகைகள், பொடி வகைகளின் தயாரிப்பிலும் ஈடுபட்டது. ஆரம்பத்தில் விநியோகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மதுரையில் மட்டுமே 5 சில்லறை விற்பனை கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் தற்போது ஏற்றுமதி செய்கிறோம். தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கொரியர் மூலம் பார்சலில் பர்சனலாக தங்களுடைய சொந்த பந்தங்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி அனுப்பி வருகிறார்கள்.
தொழிலாளர்களின் ஒத்துழைப்பு:
அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தான் முக்கியமான காரணம். நான்கு தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது பெண் தொழிலாளர்கள் மட்டுமே 80 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சிரமமான சூழலில் நிறுவனம் பயணித்து வந்தபோது எங்களுடன் இருந்த தொழிலாளர்கள் இன்றும் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்குவம் எப்படிப் பராமரிக்கப்படுகிறது?
பாரம்பர்ய முறையில் உருவாக்கும்போது அதன் சுவையும் தரமும் மாறிவிடக்கூடாது என்பதற்காக தயாரிப்புக்குத் தேவையான பொருட்களின் அளவில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பெரிய அளவில் தயாரிக்கும்போதும் அதன் பக்குவம் மாறாமல் இருப்பதற்காக தண்ணீர் முதல் தேவையான பொருட்கள் வரை எல்லாவற்றையும் சரியான அளவுகளில் சேர்க்கிறோம். அதை அளந்து கொடுப்பதற்காகவே தனிப் பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக ருசியிலும் தரத்திலும் எந்த மாற்றமும் இருப்பதில்லை. எங்களின் பலகாரங்களை ருசித்த பலரும் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறி அவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு பெரிய அளவில் ஆர்டர் கொடுக்கும் அளவுக்கு அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் ரசிகர்களாக மாறிவிடுகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படுவதுடன் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதில்லை. தரத்தில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக அரிசி மாவு, கடலை மாவு உள்ளிட்ட பொருட்களை சொந்தமாகவே அரைத்து பயன்படுத்துகிறோம். அதனாலேயே பெரும்பாலும் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் வாடிக்கையாளர்கள் அனைவருமே நல்ல கருத்தையே பகிர்ந்து வருகிறார்கள்.
தேன்குழல், கை முறுக்கு, அதிரசம், உப்பு சீடை, சீப்பு சீடை, சீயம் உள்ளிட்ட பல செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகள் அனைத்தையும் பாட்டியின் கைப்பக்குவமும் பாரம்பரியமும் மாறாமல் சுத்தமான தரமான முறையில் வழங்கி வருகிறோம். தமிழ்நாட்டில் நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஆன்லைன் மூலம் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் பெற்று உண்டு மகிழலாம்”‘ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் நிறுவனர் திரு. R. திண்ணப்பன்.